மெர்சல் இந்தி ரீமேக்கில் பாலிவுட் பாட்ஷா? கசிந்தது அட்லீயின் ரகசியம்!

Last Updated: புதன், 10 ஏப்ரல் 2019 (16:43 IST)
விஜய்யின் மெர்சல் பட இந்தி ரிமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்கவிருதப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 
 
விஜய்யின் மெர்சல் படம் இந்தியில் ரிமேக் செய்யப்படவுள்ளதாகவும் அதில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாகவும் பரவலாக பேசப்பட்டு வருவதையடுத்து தற்போது அதனை உறுதிசெய்யும் விதத்தில்  நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. 


 
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திமான நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில்  மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பரவலாக கோடி கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.  அவரது நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் படம் வெளியாகி மெகாஹிட் அடித்து ப்ளாக் பஸ்டர் வெற்றியை அடைந்தது. இந்த நிலையில், தற்போது, மெர்சல் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய ஷாருக்கான் திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வைரலாகி வருகிறது. 
 
பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக்கான் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான  ரசிகர்கள் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர். அவரின்  நடிப்புத் திறமையை கண்டு பாராட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்பேற்பட்ட நடிகர் தற்போது விஜய் நடித்த மெர்சல் படம் பிடித்துப்போக அட்லீ இயக்கத்திலேயே அதன் ரிமேக்கில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம். 
 
இதனை உறுதி செய்யும் வகையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது ஷாருக்கானுக்கு அட்லீயும் ஒன்றாக அமர்ந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி யூகிக்க வைத்தது. மேலும் நடிகர் ஷாருக்கான் இயக்குனர் அட்லீயின் அலுவலகத்திற்கு சென்று ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இதனை உறுதி செய்துள்ளது. 
 
தொடர்ந்து சில தோல்விகளை சந்தித்து வந்த ஷாருக்கான் மெர்சல் படத்தின் ஹிந்தி ரீமேக் நடித்தால் இப்படம் கண்டிப்பாக ஷாருக்கானுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மேலும் படிக்கவும் :