தொடர்புடைய செய்திகள்
- 17.85 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு... அதிர வைக்கும் உலக நிலவரம்!
- பாஜகவில் சேர்ந்தது தவறுதான்… ஆட்டோவில் சென்று மன்னிப்புக்கேட்கும் நபர்கள் – பின்னணியில் மம்தாவா?
- உதயநிதியிடம் கொரோனா நிதியளிக்க குவியும் சிறுவர் சிறுமிகள்!
- சிறப்பு ரயில்கள் இயக்கம்...தெற்கு ரயில்வே துறை அறிவிப்பு
- சென்னை உள்பட 5 நகரங்களில் மிக வேகமாக குறையும் கொரோனா பாதிப்பு!
செப்டம்பர் வரை பிளாட்பார்ம் டிக்கெட் விலை 50 ரூபாய்தான்!
சமீபத்தில் உயர்த்தப்பட்ட பிளாட்பார்ம் டிக்கெட்களின் விலை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கால ஊரடங்குக்கு முன்பாகவே ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்டத்தை குறைப்பதறகாக நடைமேடைக் கட்டண டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் செல்ல முடியும் என்ற சூழல் உருவானது. பின்னர் 10 ரூபாய் இருந்த டிக்கெட் 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த நிதி ஆண்டில் பிளாட்பார்ம் டிக்கெட்கள் மூலமாக வரும் வருவாயில் 94 சதவீதம் குறைந்துள்ளது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த டிக்கெட் விலை இன்னும் 3 மாதங்களுக்கு செப்டம்பர் வரை நீடிக்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
