செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 ஜூன் 2021 (21:43 IST)

உதயநிதியிடம் கொரோனா நிதியளிக்க குவியும் சிறுவர் சிறுமிகள்!

உதயநிதியிடம் கொரோனா நிதியளிக்க குவியும் சிறுவர் சிறுமிகள்!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையுலக பிரபலங்கள் தொழிலதிபர்கள் உள்பட பலர் தமிழக அரசுக்கு நிதி அளித்து வரும் நிலையில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி அவர்களிடம் சிறுவர்-சிறுமிகள் நிதி அளிக்க குவிந்து வருகிறார்கள். பெரும்பாலானோர் சைக்கிள் வாங்க, லேப்டாப் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை அளித்து வருகின்றனர். இன்று நிதியளித்த சிறுவர், சிறுமிகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
ராயப்பேட்டை முகம்மது உசேன் தெரு பகுதியைச் சேர்ந்த மெகபூப் பாட்ஷா - சஹிதா பானு தம்பதியின் மகன் சமீர் பாட்ஷா தன்னுடைய உண்டியல் சேமிப்பு தொகையை கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
 
ராயப்பேட்டை வரதப்பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் - ஃபரின் தம்பதியின் மகன் கிரிஷ்வந்த், தான் சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த உண்டியல் சேமிப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
 
ராயப்பேட்டை, ஜானி ஜான் கான் சாலை பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் - சரளா தம்பதியின் மகன் சபரிஷ் தன்னுடைய உண்டியல் சேமிப்பு தொகையை கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். தம்பிக்கு என் அன்பும், நன்றியும்.
 
ஹைதராபாத்தையைச் சேர்ந்த பிரேம் சிங் - பிரஷந்தா தம்பதியின் மகன் ஆனவ் சிங்(10) கொரோனா தடுப்பு பணிக்கு தன்னுடைய பங்களிப்பாக ரூ.2 ஆயிரத்துக்கான ரொக்கத்தை  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். தம்பிக்கு என் அன்பும், நன்றியும்.