செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 ஜூன் 2021 (19:24 IST)

சென்னை உள்பட 5 நகரங்களில் மிக வேகமாக குறையும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்திலேயே மிக அதிகமாக கொரோனா பாதிப்பால் இருந்த நகரம் சென்னை என்பதும் அதனை அடுத்து சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது படிப்படியாக சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் தெரிந்ததே
 
அதேபோல் கோவை ஈரோடு திருப்பூர் சேலம் ஆகிய நகரங்களிலும் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்த நிலையில் தற்போது சென்னை உள்ளிட்ட 5 முக்கிய நகரங்களில் மிக வேகமாக குறைந்து வருகிறது என்பதும் கோவை தவிர மற்ற அனைத்து நகரங்களிலும் ஆயிரத்துக்கும் கீழ் தான் தினசரி குறைந்த வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை உள்பட 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல் இதோ:
 
கோவை - 1,089
 
ஈரோடு - 964
 
சேலம் - 541
 
சென்னை - 492
 
திருப்பூர் - 481