1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : புதன், 13 மார்ச் 2019 (17:48 IST)

நீ எல்லாம் ஒரு புருஷனா? கரீனாவின் பிகினி போட்டோ சர்ச்சை

வழக்கமாக பெண்கள் திருமணமானதும் இப்படிதான் இருக்க வேண்டும் அப்படிதான் இருக்க வேண்டும் என எழுதப்படாத விதியை பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. 
அந்த வகையில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான பிரகும் பிகினி அணிந்து புகைப்படங்களுக்கு போச் கொடுப்பதாலும் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாலும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 
 
சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியான கரீனாவின் பிகினி புகைப்படத்தை பார்த்து, பலர் சயீப் அலிகானை திட்டி வருகின்றனர். அதாவது, மனைவியை கண்டிப்பதில்லை நீங்கலாம் என்ன கணவர் என கேட்டுள்ளனர். 
இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் கரீனா. அதாவது, என்னை பிகினி அணியக் கூடாது என்று சொல்ல சயிப் யார்? நீ ஏன் பிகினி அணிகிறாய், நீ ஏன் இப்படி செய்கிறாய் என்று சயிப் ஒருபோதும் கூற மாட்டார். எங்களுக்கு இடையே அத்தகைய நம்பிக்கையான உறவு உள்ளது.
 
நான் பிகினி அணிகிறேன் என்றால் கண்டிப்பாக காரணம் இருக்கும் என அவருக்கு தெரியும். நீரில் இறங்கும்போது பிகினிதானே அணிய முடியும்? இதற்கு எதற்காக என் கணவர் சயிப் கோபப்பட போகிறார் என்று விமர்சங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.