1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 28 நவம்பர் 2018 (11:37 IST)

கரீனா கபூர் இரண்டாவது முறையாக கர்ப்பமா?

பாலிவுட் நடிகை கரீனா கபூர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது போன்ற  புகைப்படம்  சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகி்றது.
 
பிரபல இந்தி பட நடிகை கரீனா கபூர் இரண்டாவது முறையாக கருவுற்றிருப்பதாக பதிவிட்டு சிலர் புகைப்படத்தை பரப்பிவிட்டுள்ளனர்.
 
இந்தப் படம் நவம்பர் 2016-ல் கரீனா கபூர் மும்பையில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றிலிருந்து வெளியேறும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தற்பொழுது தெரிய வந்துள்ளது.
 
கடந்த 2016 டிசம்பர் 20 ஆம் தேதி தான் கரீனா கபூருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், பழைய படத்தைக் வைத்து மீண்டும் கரீனா கருவுற்றிருப்பதாக தவறாக சிலர் செய்தி வெளியிட்டு இருப்பதாக  கரீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.