திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வியாழன், 11 அக்டோபர் 2018 (15:29 IST)

கரீனா கபூரின் குழந்தையை பார்த்துக் கொள்ளும் பெண்ணுக்கு மாதம்ரூ.1½ லட்சம் சம்பளம்

தன் குழந்தையை பார்த்துக் கொள்ளும் பெண்ணுக்கு மாதம் ரூ.1½ லட்சம் சம்பளம் கொடுக்கிறார் கரீனா கபூர்.
நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பாலிவுட் நடிகைகரீனா கபூர். இவர்களுக்கு தைமூர் அலிகான் என்ற மகன் இருக்கிறான். இந்தகுழந்தையை கவனித்துக்கொள்ள கரீனா கபூர் பிரத்யேகமாக பெண் ஒருவரை நியமித்து உள்ளார்.

அந்த பெண்ணுக்கு மாதம் ரூ.1½ லட்சம் சம்பளம் கொடுக்கிறார். குழந்தையை கவனித்துக்கொள்ள இந்த பெண்ணை தேர்வு செய்யும் முன்பு பெரிய அளவில் நேர்முகதேர்வு நடத்தினாராம் கரீனா கபூர்.

இதில் நிறைய குழந்தை வளர்ப்புநிபுணர்களெல்லாம் இதில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த நேர்முக தேர்வில்தேர்வு செய்யப்பட்ட பெண்ணுக்கு, குழந்தையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை கரீனா வழங்கியுள்ளார். அவருக்கு மாதத்துக்கு ரூ.1½ லட்சம் சம்பளம் வழங்கி வருகிறார்.