1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Updated : வியாழன், 11 அக்டோபர் 2018 (15:35 IST)

இரவு முழுக்க காத்திருந்த ரசிகர்களுக்கு அஜித் கொடுத்த இன்ப அதிர்ச்சி

மதுரை மற்றும் தேனியை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் விஸ்வாசம் படத்தில் அஜித்  நடித்து வருகிறார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்குகிறார்.
டி இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.  இவர்களுடன் தம்பி ராமையா, யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோரும் நடித்து  வருகின்றனர்.
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி மற்றும்  ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு படம் வெளியாகும்  என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்துக்கான டப்பிங் பணிகளில் அஜித் ஈடுபட்டுள்ளார்.
 
இதற்காக சென்னையில் இருக்கும் டப்பிங் திரையரங்கில் அஜித் தனது பணிகளை தொடருவதை  தெரிந்து கொண்ட அஜித்தின் ரசிகர்கள் திரையரங்கின் வாயிலில் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்.
 
அதிகாலை 5 மணிக்கு தனது டப்பிங் பணியை முடித்துவிட்டு வெளியே வந்த அஜித்தின் காருக்கு  பின்னால் அவரது ரசிகர்கள் ஓடியுள்ளனர். அதை கவனித்த அஜித் காரை பின்னால் எடுத்து  ரசிகர்களை சந்தித்துள்ளார்.
 
அப்போது உங்களுடன் புகைப்படம் எடுக்கவே நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர். டப்பிங்  பேசி ரொம்ப சோர்வா இருக்கு. தனித்தனியா புகைப்படம் வேண்டாம். எல்லோரும் சேர்ந்து ஒரே  புகைப்படமாக எடுத்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.
 
ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அஜித், ரசிகர்களை நலம் விசாரித்துவிட்டு பத்திரமாக  வீட்டுக்குச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். புகைப்படம் எடுத்த ரசிகர்கள் தங்களது  புகைப்படங்களைசமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.