புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (15:24 IST)

கஜா புயல் நிவாரணம்: புது ஸ்டைலை பின்பற்றும் தளபதி விஜய்

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் சூறையாடி மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து , தலைமுறை தலைமுறையாக சேர்த்து வைத்த தென்னை மரங்களை முற்றிலும் அழித்துள்ளது. 
 
கஜா புயலால் புதுச்சேரி, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுனாமியை அடுத்து தமிழகத்தை அதிகமாக பாதித்த இயற்கை பேரிடராக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர்.
 
இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பலரும் உதவி வருகின்றனர். புயல் பாதித்த மாவட்டங்களில் உள்ள தனது நற்பணி இயக்கத்தின் வாயிலாக பணம் அனுப்பி நடிகர் விஜய் உதவி வருகிறார். 
 
கடலூர் மாவட்ட தளபதி தலைமை விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.சீனுவின் வங்கி கணக்கிற்கு மட்டும்  விஜய் ரூ. 4.5 லட்சம் அனுப்பி வைத்துள்ளார். இதை சீனு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது , ''தளபதி விஜய் அவர்களிடமிருந்து என்னுடைய வங்கி கணக்கில் ரூ. 4.5 லட்சம் வந்துள்ளது. தலைமையிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று நிவாரணப் பொருட்கள் வழங்குமாறு தெரிவித்தார்கள். தளபதியை பாராட்ட வார்த்தைகள் இல்லை'' என்று பதிவிட்டுள்ளார். 
 
இதற்கு முன்னதாக கேராளவில் வெள்ளம் ஏற்பட்டபோதும், தனது ரசிகர் மன்றத்தின் வாயிலாக விஜய் உதவிக்கரம் நீட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
https://twitter.com/v4umedia1/status/1064768717291118592?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1064768717291118592&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Factor-vijay-has-deposited-4-50-lakh-rupees-in-each-account-of-vijay-makkal-iyakkam-heads-of-all-gaja-cyclone-affected-districts%2Farticleshow%2F66705537.cms