திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (14:30 IST)

கஜா புயலுக்கு ரஜினி கொடுத்த நிவாரண தொகை இவ்வளவா?

கஜா புயலுக்காக நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் நிவாரண உதவி வழங்கியுள்ளார்.
 
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர். தமிழகமெங்கிலிருந்தும் அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
 
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை தனது ரசிகர்கள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.