செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 20 நவம்பர் 2018 (13:24 IST)

கஜா புயல்: ரசிகர்களின் கணக்கில் பணம் அனுப்பி உதவும் விஜய்!

தளபதி விஜய்,  தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்.
 
கேரளாவில் பெருமழை வந்தபோது தனது ரசிகர்கள் மன்றங்களுக்கு பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் அனுப்பி உதவிகளை செய்ய வைத்தார். 
 
அந்த வகையில் தற்போது  கஜா புயல் பாதித்த பகுதிகளில் உள்ள விஜய் ரசிகர்கள் மன்றங்களின் தலைவர்களின் கணக்கிற்கு ரூ.2லட்சம் முதல்  4.5 லட்சம் வரை நடிகர் விஜய் அனுப்பி உள்ளார்.  
 
மேலும் டெல்டா மாவட்டங்களில் உள்ள  ரசிகர்கள் மன்றங்களின் தலைவர்கள் கணக்குக்கு நடிகர் விஜய் ரூ.40 லட்சம் அனுப்பி உள்ளார்.
 
சென்னை இந்திரா நகர் ஆக்ஸிஸ் வங்கியில் இருந்து ரசிகர்களுக்கு பணம் அனுப்பிய ரசிது வெளியாகி உள்ளது. இதைவைத்தே விஜய் ரசிகர் மன்றம் மூலம் உதவி செய்திருப்பது தெரியவந்துள்ளது.    
 
விஜய்யின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.