1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : செவ்வாய், 12 ஜூன் 2018 (18:49 IST)

தீபிகாவின் இந்த முடிவுக்கு யார் காரணம்?

தீபிகா படுகோனேவின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பத்மாவத். இந்த படம் கடும் சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளையும் தாண்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்த படத்திற்கு பின்னர் அவர் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் உள்ளார். இதற்கு காரணம் தீபிகா ஹீரோவுக்கு சமமாக சம்பளம் கேட்பதுதான் என்று சில தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
 
பத்வாவத் படத்திற்காக இயக்குனர் பன்சாலி தீபிகாவுக்கு வழக்கத்தை விட அதிக சம்பளம் கொடுத்துவிட்டார். இதனால் இனி வரும் படங்களுக்கெல்லாம் அதிக சம்பளத்தையே எதிர்ப்பார்க்கிறாராம்.
 
மேலும் கதை சொல்லும் இயக்குநர்களிடம் கதையில் கை வைக்கும் உரிமையும் கேட்கிறாராம். இதனால், இவ்வாறு தீபிகா மாறியதற்கு சஞ்சை லீலா பன்சாலிதான் காரணம் என்று மற்ற தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர்.