செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 26 மே 2018 (16:14 IST)

கழிவறை இல்லையேல் சம்பளம் இல்லை

கழிவறை இல்லாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என உத்தரப்பிரதேச மாவட்ட ஆட்சியகம் தெரிவித்துள்ளது.
ஸ்வச் பாரத்திட்டத்தின்(Swachh Bharat Mission) கீழ் வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டு, திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்துவது குறைக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்ட ஆட்சியாளர் சீதல் வர்மா, அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் வீட்டில் இருக்கும் கழிவறையைப் புகைப்படம் எடுத்துதும் கழிப்பறை கட்டியதற்கான அடையாள சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்படி வீட்டில் கழிப்பறை இல்லாத ஊழியர்களும் கழிப்பறை கட்டி புகைப்படம் எடுத்து அனுப்பி வருகின்றனர்.
 
தற்பொழுது வரை யார் புகைப்படத்தையும் கழிப்பறை கட்டியதற்கான அடையாள சான்றையும் சமர்ப்பிக்கவில்லையோ அவர்களின் மே மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என ஆட்சியர் அதிரடியாக  தெரிவித்துள்ளார்.