1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. Salman Khan Race 3 gets U/A certificate

சல்மான் கானின் ‘ரேஸ் 3’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

சல்மான் கான்
சல்மான் கான் நடித்துள்ள ‘ரேஸ் 3’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது மத்திய தணிக்கை வாரியம்.

 
சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரேஸ் 3’. வருகிற ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் 15ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ரெமோ டிசோஸா இயக்கியுள்ள இந்தப் படத்தில் அனில் கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், பாபி தியோல், டெய்ஸி ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
சல்மான் கானே இந்தப் படத்தைத் தயாரித்து, வெளியிடுகிறார். இந்தப் படத்தைப் பார்த்த மத்திய தணிக்கை வாரிய உறுப்பினர்கள், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தின் மொத்த ரன்னிங் டைம், 160 நிமிடங்கள். அதாவது, 2 மணி 40 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்தப் படம் எடிட் செய்யப்பட்டுள்ளது.
About Writer
CM
அடுத்த கட்டுரையில்
ஷூட்டிங்கில் விபத்து : பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் படுகாயம்