பட வாய்ப்பு இல்லாமல் திண்டாடும் தீபிகா படுகோனே!
நடிகை தீபிகா படுகோனோ பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறாராம். தீபிகா படுகோனே வாய்ப்பு இல்லாமல் இருப்பதர்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.
தீபிகா படுகோனேயின் பத்மாவத் படம் சர்ச்சைகளில் சிக்கி ஜனவரியில் திரைக்கு வந்தது. ரூ.215 கோடியில் உருவாக்கப்பட்டு ரூ.585 கோடி வசூலித்தது. இந்த படத்துக்கு பிறகு புதிய கதைகள் எதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
தீபிகா படுகோனே இந்தியில் பிரபல நடிகராக இருக்கும் ரன்வீர் சிங்கும் பல வருடங்களாக காதலிக்கின்றனர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதால் சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருக்கிறார் என்கின்றனர்.
ஆனால், சிலரோ படப்பிடிப்பில் தீபிகா படுகோனேவிற்கு அடிப்பட்டதால் கழுத்திலும் தோளிலும் காயம் ஏற்பட்டுள்ளதால் புதிய படங்களை ஏற்காமல் இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
வேறு சிலர் படங்களில் நடிக்காததற்கு நல்ல கதையும் கதாபாத்திரமும் அமையாததுதான் என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும், சம்பளத்தை கணிசமாக ஏற்றியதாலும் வாய்ப்புகள் இல்லை என பேச்சுகள் எழுகிறது.