செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 ஏப்ரல் 2019 (10:57 IST)

படுக்கைக்கு அழைத்த உதவி இயக்குனரை படாதபாடுபடுத்திய துணை நடிகை!!!

தன்னை படுக்கைக்கு அழைத்த உதவி இயக்குனரின் முகத்திரையை துணை நடிகை ஒருவர் கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
 
திரைத்துறையில் தற்போது நடிகைகள் தாங்கள் சந்தித்து வரும் பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே சொல்லி வருகின்றனர்.
 
அந்த வகையில் மலையாள துணை நடிகை சஜிதா தான் சந்தித்த பாலியல் தொல்லை குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனக்கு கார்த்திக் என்ற உதவி இயக்குனர் போன் செய்து படம் ஒன்றில் நீங்கள் நடிக்கிறீர்களா என கேட்டார். அதற்கு நானும் சரி என கூறினேன். பின்னர் அந்த இயக்குனர் அட்ஜஸ்ட் பண்ண தயாரா என கேட்டார். இதனால் அதிர்ந்துபோன நான் நடிகைகளை மட்டும் தான் அட்ஜஸ்ட் பண்ண சொல்வீர்களா இல்லை நடிகர்களையுமா என கார்த்திக்கிடம் கேட்டுவிட்டு போனை கட் செய்துவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
 
கார்த்திக்கை பழிவாங்கும் நோக்கில் சஜிதா, கார்த்திக்கின் போன் நம்பரை பதிவிட்டு அட்ஜஸ்ட் பண்ண தயாராக உள்ளவர்கள் இந்த உதவி இயக்குநரை அணுகலாம் என ஃபேஸ்புக்கில் பதிவிட்டுவிட்டார். இவன்களை மாதிரியான ஆட்களுக்கு இது சரியான பாடம் என சஜிதாவை பலர் பாராட்டி வருகின்றனர்.