செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2019 (18:11 IST)

வியாபாரியை கட்டிப்போட்டு ராசிக்கற்கள் கொள்ளை

ஆந்திர மாநிலம் விசாக பட்டிணத்தைச் சேர்ந்தவர் ஜபானா ரெட்டிச் சீனிவாச ராவ். இவர் ராசிக்கல் வியாபாரம் செய்துவருகிறார். இணையதளம் மூலம் ராசிக்கற்களை விறகும் இவரை சமீபத்தில் சென்னையில் இருந்து ஒருவர் வியாபாரம் நிமித்தமாக தொலைபேசியில் அழைத்துள்ளார்.
இதனையடுத்து அந்த நபர் கேட்டபடி ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ராசிக்கற்களை எடுத்துக்கொண்டு பாரிமுனையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். 
 
இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி இரவு இவரது அறையின் கதவைத் தட்டிய 4 பேர் தாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை என்று அறிமுகம் செய்துகொண்டனர். பின்னர் முகேஷ் என்ற வியாபாரி எங்கே என்று கேட்டு சீனிவாச ராவை கட்டிப்போட்டு அவரிடம் இருந்த ராசிக்கற்களை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து வடக்குக்கடற்கரை காவல் நிலையத்தில் ஜபான ரெட்டி புகார் கொடுத்திருந்தார், அதன் பின்னர் அந்த விடுதியில் சோதனை மேற்கொண்ட போலீஸார் ராசிக்கற்களை கொள்ளையடித்த 4 பேரின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் கொள்ளையடித்த 4 பேரில் ஒருவன் மும்பைக்குச் சென்றுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
 
எனவே  போலீஸார் குற்றவாளிகளைப்பிடிக்க தீவிரமாக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.