வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 25 ஏப்ரல் 2019 (14:50 IST)

தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரில் சதி உள்ளதா ? விசாரிக்க குழு அமைப்பு

தலைமை நீதிபதியை பாலியல் புகாரில் சிக்கவைக்க மிகப்பெரிய சதி என வழக்கறிஞர் உத்சவ் பெய்ன்ஸ் குற்றம்சாட்டியிருந்தார். தற்போது தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரில் சதி உள்ளதா என ஏ.கே. பட்நாயக் குழு  விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஜூனியர் கோர்ட் அசிஸ்டெண்டாக சில ஆண்டுகள் பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் உள்ள 22 நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
 
அதில் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் குடியிருப்பு அலுவலகத்தில் ரஞ்சன் கோகாய் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக சிறப்பு விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
 
இந்த பாலியல் அத்துமீறல் மட்டுமல்லாமல் இதனால் தனது குடும்பத்தைச் சேர்ந்த கணவரும் அவரது தம்பியும் காவல்துறையில் தங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை நீதிபதி ரஞ்சன் கோகாய் முழுதாக மறுத்து கூறியதாவது :

‘என் மீது குற்றஞ்சாட்டிய பெண்ணுக்கு பின்னால் மிகப்பெரிய சக்தி இருக்கிறது. அவர் பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது. நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் விஷயத்தில் ஊடகங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். இதனால் நீதித்துறையின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சக நீதிபதியான அருண் மிஸ்ரா ‘ ஊடகங்கள் இந்த பிரச்சனையில் கவனமாக செயல்படவேண்டும். இதுவரை எந்தவிதமான உத்தரவும் இந்த தீர்ப்பில் பிறப்பிக்கவில்லை’ எனவும் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளதாவது:
 
தலைமை நீதிபதியை பாலியல் புகாரில் சிக்கவைக்க மிகப்பெரிய சதி என வழக்கறிஞர் உத்சவ் பெய்ன்ஸ் குற்றம்சாட்டியிருந்தார். தற்போது தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரில் சதி உள்ளதா என ஏ.கே. பட்நாயக் குழு  விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.