ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (11:59 IST)

மகள் வயது நடிகையுடன் சல்மான் கான்! கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!

பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சல்மான் கான் மகள் வயது நடிகையுடன் நடிப்பதை அறிந்த இந்தி சினிமா ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். 
 
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். அழகாலும் திறமையான நடிப்பாலும் அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதை தட்டியவர். 
 
இவருக்கு தொடந்து பல படங்களில் நடிக்க வாய்புகள் கிடைத்தாலும், கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் மிகவும் துணிச்சலாக தேர்வு செய்து நடித்த உத்தா பஞ்சாப், அக்லி, ஹை வே உள்ளிட்ட  படங்கள் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. 
 
பாலிவுட் இளம் நடிகைகளுக்கு டப் போட்டியாளராக இருக்கும், ஆலியாவுடன் ஜோடி போட பல நடிகர்கள் வெயிட்டிங் .. அந்தவகையில் தற்போது பாலிவுட் சூப்பர் ஹீரோவான நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவிருக்கிறார். 
 
53 வயதாகும் சல்மான் கானுக்கு 26 வயதாகும் ஆலியா பட் ஜோடியா? அப்பாவும், மகளும் சேர்ந்து நடித்தது போன்று இருக்கும் என சல்மான் கானுக்கு  ஜோடியாக ஆலியா பட் நடிப்பதை அறிந்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். இது குறித்து பேசிய ஆலியாபட், பாலிவுட்டில் பிரமாண்ட படங்கள் எடுப்பதற்கு பெயர் போன சஞ்சய் லீலா பன்சாலி  நமக்கு பல நல்ல படங்களை அளித்தவர் . அவரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அவரின் கதை மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டுமே தவிர அதை விட்டுவிட்டு யூகிக்கக்கூடாது மேலும் சல்மான் கானுடன் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ஆலியா பட் தெரிவித்துள்ளார்.