செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 4 டிசம்பர் 2018 (21:39 IST)

ஷாருகான் சல்மான்கான் இடையே ஆன போட்டியில் ஜெயிக்கப்போவது யாரு...?

பாலிவுட் இயக்குநர் ஆனந்த் லால் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ஜீரோ படத்தின் டிரைலர் சென்ற மாதம்  பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் சாரூக்கிற்கு ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறார்.  மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் நடித்துள்ளார் என்று கூறிவருகிறார்கள்.
இப்படத்தை கௌரிகானில் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் கத்ரீனா கைப்பும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
 
இந்நிலையில் ஜீரோ படத்தில் ஷாருக்கானும் , சலமான் கானும் டான்ஸ் ஆடுவது போன்று இன்று ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
 
இந்த டான்ஸில் இருவரும் இணைந்து ஒரு பாடலில் ஆடியுள்ளது இருவருக்கும் இடியேயான டான்ஸ் போட்டியை மையமாகக் கொண்டதாகவும் ஒரு காவிய அந்தஸ்துள்ள ரகமாகவும் பாலிவுட்டில் பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் ஷாரூகின்  ஜீரொ படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.