வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Updated : வியாழன், 21 மார்ச் 2019 (18:45 IST)

தேர்தலில் போட்டியும் இல்லை : யாருக்காகவும் பிரசாரமும் இல்லை - பிரபல நடிகர்

வரும் பாரளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் அனல் பறக்க பிரசாரம் செய்து வருகிம்ன்றனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள பாஜகவின் செல்வாக்கு மிக்க தொகுதியாக  இந்தூரில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கானை பிரசாரம் செய்ய காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. 
இந்நிலையில் பிரதமர் மோடி பிரபலமான நடிகர்களை ஓட்டுப்போடவும்  வாக்களிப்பதையும் இளஞர்களிடையே ஊக்குவிக்க  கேட்டுக்கொண்டார். இதனையடுத்து ஓட்டளிப்பது ஜனநாயக நாட்டில் அனைவரது உரிமை. வாக்களிக்க தகுதிபெற்ற  வாக்காளர்கல் தங்களது ஓட்டைப் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். 
 
இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக சல்மானகான் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்று வதந்தி பரவியது.
 
இதுபற்றி சல்மான் கான் கூறியதாவது:
 
வரும்  தேர்தலில் நான் போட்டியிடப்போவதுமில்லை. எந்தக் கட்சிக்கும் பிரச்சாரம் செய்யப் போவதுமில்லை என்று தெரிவித்துள்ளார்.