ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : புதன், 19 செப்டம்பர் 2018 (11:22 IST)

28 வயது பாடகி - 65 வயது காதலனுடன் பிக்பாஸில் பங்கேற்பு

நேற்று முன்தினம் பிக்பாஸ் ஹிந்தி 12வது சீசன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள போட்டியாளர்கள் ஜோடிகளாகவே உள்ளனர்.
28 வயதாகும் பாடகி ஜாஸ்லின் மதரு மற்றும்  அவரது 65 வயது காதலர் அனுப் ஜலோட்டாவுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
ஆன்மீக பஜனை பாடல்கள் பாடி பிரபலமானவர் அனுப் ஜலோட்டா. அவரை காதலிப்பதாக 28 வயது இளம் பாடகி ஜாஸ்லின் தெரிவித்தார். இதை கேட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கான் பெரிய அதிர்ச்சி அடைந்தார். மூன்று வருடமாக காதலித்து வருகிறோம் என அவர்கள் தெரிவித்தது தான் ஹைலைட்டே.