திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (19:04 IST)

இனிமேல் பிக்பாஸ் 9 மணிக்கு இல்லை: திடீர் நேரமாற்றம் ஏன்?

விஜய் டிவியில் கடந்த மூன்று மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது வைல்ட்கார்ட் போட்டியாளராக வந்த விஜயலட்சுமியுடன் சேர்த்து 6 பேர் மட்டுமே உள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படி வரும் 24ஆம் தேதி இந்த நிகழ்ச்சி முடிவடைய வேண்டும். ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சி 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த ஞாயிறு அன்று கமல்ஹாசனும் உறுதி செய்தார்.

ஆனால் அதே நேரத்தில் செப்டம்பர் 24 முதல் இரவு 9 மணிக்கு புதிய தொலைக்காட்சி தொடர் ஒன்றை ஒளிபரப்புவதாக விஜய் டிவி விளம்பரம் செய்து வருகின்றது. இதுகுறித்து விஜய் டிவி தரப்பிடம் விசாரித்தபோது செப்டம்பர் 24 முதல் ஐந்து நாட்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி 9.30 மணிக்கு ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.