ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By VM
Last Modified: செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (11:27 IST)

பிக் பாஸில் ஐஸ்வர்யா செய்த தில்லுமுல்லு... சக போட்டியாளர்கள் கடும் கோபம்!

பிக் பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. பிக்பாஸில் இப்போது கொடுக்கப்படும் டாஸ்குகள் மிகவும் கடினமாக மாறியுள்ளது.

ஒரு போட்டியாளரை அவுட்டாக்க மற்ற போட்டியாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இதனால் சிலர் தண்ணீர், பெப்பர், சோப்பு, முட்டை என பல விதமாக டார்ச்சர் செய்துள்ளனர்.

ஆரம்பம் முதலே ஐஸ்வர்யா-யாஷிகா இருவரும் கூட்டணியாக சேர்ந்து மற்ற போட்டியாளர்கள் சித்ரவதை செய்தனர்.

ஆனால் யாஷிகா டாஸ்க் செய்ய வேண்டிய நேரம் வரும்போது ஐஸ்வர்யா அவருக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்துவிட்டார். யாஷிகா மீது ஐஸ்பேக் வைக்கலாம் என விஜயலக்ஷ்மி பிரிட்ஜில் வைத்துவிட்டு வந்தார். ஆனால் ஐஸ்வர்யா யாருக்கும் தெரியாமல் அதை எடுத்து வெளியே வைத்துவிட்டார். இது தொடர்பாக மற்ற போட்டியாளர்கள் அவருடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

இந்நிலையில் அடுத்த வாரம் யார் பைனல் போகக்கூடாது என அனைத்து போட்டியாளர்களிடம் பிக்பாஸ் கேட்டார். அதற்கு அவர்களில் பலர் ஐஸ்வர்யாவின் பெயரை தான் கூறினார்கள். ஐஸ்வர்யா இன்று செய்த தில்லுமுல்லு அனைவயையும் கடுப்பாக்கி உள்ளது.