திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 17 செப்டம்பர் 2018 (08:22 IST)

இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்: கிளைமாக்ஸை நெருங்குகிறது பிக்பாஸ்

பிக்பாஸ் போட்டியாளர்களில் சீனியரும், அன்பு வேஷம் போட்டு ஏமாற்றி வந்ததாக கூறப்பட்டவவருமான மும்தாஜ் நேற்று வெளியேற்றப்பட்டார். தமிழ்ப்பெண் தான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம் என்று ரித்விகாவுக்கு அறிவுரை கூறிய மும்தாஜ், இந்தி பெண்களான ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவை அனைவரும் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் என்று வீட்டை விட்டு வெளியேறும்போது அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

மும்தாஜ் வெளியேறியவுடன் பிக்பாஸ் வீட்டில் தற்போது 6 பேர் மட்டுமே உள்ளனர் இவர்களில் பாலாஜி ஒருவர் மட்டுமே ஆண் போட்டியாளர்.

இந்த நிலையில் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெறவிருப்பதாகவும், அடுத்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறவுள்ளதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார். அதற்கு அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் என்றும், இறுதிப்போட்டியில் ஜனனி உள்பட 4 பேர் பங்கேற்பார்கள் என்றும் அவர் அறிவித்தார்.

இந்த வாரம் எவிக்சன் பட்டியல் இன்று தயாராகும். அதில் இரண்டு நபர்களை வெளியேற்ற மக்கள் தயாராக உள்ளனர்.