தொடர்புடைய செய்திகள்
- நியூராலிங்க்: மனித மூளையில் சிப் வைக்கும் எலான் மஸ்க்கின் திட்டத்தில் முன்னேற்றம் மற்றும் பிற செய்திகள்
- கொரோனா: ஐடி நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம் என்ன காரணம்?
- CO2 காற்றில் இருந்து கரியமில வாயுவை நீக்குவதால் நம் உணவுப் பொருள்கள் விலை உயருமா?
- இரான் சுட்டு வீழ்த்திய உக்ரைன் விமானத்தின் கருப்பு பெட்டி பதிவு செய்த 19 நொடிகள் மற்றும் பிற செய்திகள்
- மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் 75 கோடி தயார் நிலையில் - ஏன்? எதற்காக?
யுவன் சங்கர் ராஜா: அம்மா பாசம், நா.முத்துக்குமார் நட்பு - 10 தகவல்கள்
இன்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள். அவரைப் பற்றிய 10 சுவாரசியமான தகவல்களை தொகுத்து அளிக்கிறோம்.
- பாடல்களுக்கு உலக தர வரிசை பட்டியல் அளிக்கும் 'பில் போர்ட்ஸ்', கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு இவர் இசையமைத்த 'ரௌடி பேபி' பாடலுக்கு 4 ஆம் இடம் அளித்திருந்த்து.
- கடந்த 2019 ஆம் ஆண்டு 'யூடியுப்' வெளியிட்ட தரவரிசை பட்டியலில், 'ரௌடி பேபி' பாடல் வீடியோவுக்கு உலக அளவில் 7வது இடமும், இந்திய அளவில் முதல் இடமும் அளிக்கப்பட்டிருந்தது.
- 14 வயதில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன். இவரது முதல் படத்தின் பெயர் 'அரவிந்தன்'.
- அரவிந்தன் திரைப்படத்திற்குதான் முதன்முதலாக தமிழ் சினிமாவில் 'டிரெய்லர்' வெளியிடப்பட்டது. அதற்கான இசையை தனது இவர் வடிவமைத்தார். அந்த படத்திற்கு ஒப்பந்தமான போது வயது 14.
- முதல் படம் முதலே இளையராஜாவுக்கு நிகரான வேகத்தில் இவரும் இசை பதிவுகளை வேகமாக முடித்துவிடுவார்
- முறையான இசை வகுப்புகளுக்கு செல்லாதவர்.
- 35 வயதுக்குள் 100 படங்களுக்கு மேலாக இசையமைத்தவர்.
- தமிழகத்தில் கதாநாயகர்களுக்கு இணையான இளம் ரசிகர்கள் நடத்தும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இவரது பிறந்த நாளுக்கு கட்டவுட்டுகள் வைத்து கொண்டாடப்படுவது வழக்கம்.
- தனது தந்தையை விட தாய் மீது அதிக அளவிலான பாசம் கொண்டவராகவே யுவன் தன்னை வெளிப்படுத்துபவர். தனது தாய் பிறந்த தினத்திலேயே தனது மகள் 'ஜியா' பிறந்ததை பெருமையாக நண்பர்களிடம் பேசுவார்.
- நா.முத்துக்குமார் மீது அளவு கடந்த பாசமிக்கவராக இருந்த இவர், தனது அலுவலகத்தில் முத்துக்குமாருக்கேன்றே தனி அறையும் ஒதுக்கியிருந்தார்.
அடுத்த கட்டுரையில்