விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது - இந்திய விமானப்படை பரிந்துரை

Last Updated: ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (17:16 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் பணிபுரிந்து வந்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
பாகிஸ்தானால் திரும்பி ஒப்படைக்கப்பட்டதும் நாடு திரும்பிய அபிநந்தன், நான்கு வார விடுப்பில் சென்றார். பின்னர் ஸ்ரீநகரில் முன்பு பணிபுரிந்த படைப்பிரிவில் கடந்த மாதம் இணைந்தார். இந்நிலையில் ஸ்ரீநகரில் அவர் பணிபுரிந்த படைப்பிரிவில் இருந்து பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என இந்திய விமானப்படை வட்டாரத் தகவல்கள் கூறுகிறது.
 
தற்போது அவர் விமானப்படையின் மேற்குப்பகுதி படைப்பிரிவில் பணி அமர்த்தப்பட்டுள்ளார். இது வழக்கமான பணியிட மாற்றம்தான்.
 
போர் காலத்தில் வழங்கப்படும் வீர தீர செயல்களுக்கான வீர் சக்ரா விருதுக்கு, அபிநந்தனின் பெயரை பரிந்துரை செய்யவும் விமானப்படை முடிவு செய்துள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :