பாகிஸ்தான் டீ கடை விளம்பரத்துதரான அபிநந்தன்...?

Last Modified புதன், 13 மார்ச் 2019 (20:05 IST)
இந்தியா - பாகிஸ்தான் மத்தியில் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு அடுத்தடுத்த நடந்த எல்லை தாண்டிய தாக்குதல் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியது. 
 
அதோடு, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் சிக்கியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பாகிஸ்தான் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதக அறிவித்த பின்னரும், அவர் இந்தியா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் வரை பதற்றம் நிலவியது. 
 
இப்படியிருக்கையில், அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் இருந்த போது, அவருக்கு தேனீர் வழங்கப்பட்டது. அதனை பருகியபடி அவர் ராணுவ வீரர்களில் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. 
இந்நிலையில், இதை வைத்துக்கொண்டு பாகிஸ்தானில் பலர் அபிநந்தனை டீ விளம்பரத்திறகு பௌஅன்படுத்தி வருகின்றனர். ஆம், அபிநந்தன் படத்தை பாகிஸ்தான் டீக்கடையில் ஒருவர் பயன்படுத்தி உள்ளார். 
 
அவரது புகைப்படத்தோடு, எதிரிகளையும் நண்பர்களாக்கும் தேனீர் என்ற வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :