ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2019 (13:12 IST)

புல்வாமா தாக்குதல் – பயங்கரவாதிகளின் கூட்டாளி கைது

புல்வாமா தாக்குதலில் சம்மந்தம் உள்ள சஜ்ஜத்கான் எனும் நபர் டெல்லியில் சிறப்புக் காவல்படை பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த நாள் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். அதன் பின்னர் பேச்சுவார்த்தையின் பயனாக அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

புல்வாமா தாக்குதலுக்காகப் பயன்படுத்திய வாகனம் மற்றும் வெடிபொருட்களை ஏற்பாடு செய்தது ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த முடாசிர் அகமத் கான் என்பது கண்டறியப்பட்டது. அவர் மார்ச் 11ஆம் தேதியன்று நடத்தப்பட்ட என்கவுண்டரில் முடாசிர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பயங்கரவாதி முடாசிர் உடன் இணைந்து செயலாற்றியவர் சஜ்ஜத் கான் எனவும் அவர் டெல்லியில் சால்வை விற்பனையாளராக இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் நேற்று அவர்  டெல்லி சிறப்புக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இப்போது தாக்குதல் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.