வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (14:16 IST)

சீன நிறுவனங்களை தடை செய்த அமெரிக்கா!

சீனாவில் வீகர் இன மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் நடப்பதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்படுவதை அடுத்து அமெரிக்கா 28 சீன அமைப்புகளைத் தடுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
 
இந்த நிறுவனங்களால் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து எந்தப் பொருட்களையும் கொள்முதல் செய்ய முடியாது. இந்த நிறுவனங்கள் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா வணிக துறையின் தரவு ஒன்று கூறுகிறது. 
 
மேற்கு சீனாவில் ஜின்ஜியாங் பகுதியில், விசாரணையின்றி லட்சக்கணக்கான முஸ்லிம்களை அடைத்து வைத்திருப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. இந்தத் தடை குறித்து சீனா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.