சீன அதிபரின் மாமல்லபுரம் பயணம் திடீர் ஒத்திவைப்பா?

Last Modified ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (23:06 IST)
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், சீன எல்லை அருகே இந்திய ராணுவம் பிரம்மாண்டமான போர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதால், சீனா அதிருப்தி அடைந்திருப்பதாகவும், இதனால், சீன அதிபரின் சென்னை பயணம் தாமதமாக வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஸீ ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களும் அக்டோபர் 11-ஆம் தேதி சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை முதல் மாமல்லபுரம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் சில முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், வரலாற்று பின்னணி கொண்ட மாமல்லபுரத்தில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் சீன எல்லையில் இருக்கும் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய ராணுவம் பிரம்மாண்டமான போர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. ’ஹிம் விஜய்’ என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த போர்ப்பயிற்சி நாளை முதல் அதாவது அக்டோபர் 7-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடக்கும் என்றும் அதன்பின்னர் அக்டோபர் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த போர்ப்பயிற்சி குறித்த தகவால் சீனா அதிருப்தி அடைந்திருப்பதாகவும்,
இதனால் சீன அதிபரின் இந்திய பயணம் ஒத்திப்போக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :