சீனாவில் பிறந்த அரிய வகை சிங்கக்குட்டிகள்... வைரலாகும் போட்டோ

LIONS
sinojkiyan| Last Modified திங்கள், 7 அக்டோபர் 2019 (13:46 IST)
சீனா தேசத்தில் ஷாண்டாங் என்ற மாகாணத்தில் உள்ள பூங்காவில் அரிய வகை வெள்ளை சிங்கங்கள் பிறந்துள்ளன. இதம் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
சீனா தேசத்தில் ஷாண்டாங் என்ற கிழக்கு மாகாணத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற விலங்கியல் பூங்கா. 
 
இங்கு ஆப்பிரிக்கா சிங்கங்களின் வகையைச் சேர்ந்த அல்பினோ என்ற வெள்ளை வண்ண சிங்கள் பாதுகாப்புடன் வளக்கப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி அன்று, அங்குள்ள இரு வெள்ளை சிங்கங்களில் ஒன்று இரண்டு வெள்ளை நிற சிங்கக் குட்டிகளை ஈன்றது.  அவற்றை தாயிடம் இருந்து எடுத்து இங்குபேட்டரில் வைத்து ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர். புதிதாகப் பிறந்த சிங்கக் குட்டிகளில் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :