1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 12 ஜனவரி 2022 (10:31 IST)

ஊதியமாக தானியம் வாங்கும் தாலிபன்கள்

வேலை செய்பவர்களுக்கு சன்மானமாக உணவு வழங்கும் திட்டத்தை தாங்கள் விரிவுபடுத்தி உள்ளதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.


இதன்படி ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் பல்லாயிரம் பொதுத்துறை ஊழியர்களுக்கு நன்கொடையாக பெறப்பட்ட கோதுமை ஊதியமாக வழங்கப்படும்.

2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தை தாலிபன்கள் கைப்பற்றிய பின்பு அங்கு பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.

ஊழியர்களுக்கு ஊதியமாக தானியத்தை வழங்கும் தாலிபான்களின் முடிவு பொருளாதார நெருக்கடியை வெளிக்காட்டும் வகையில் உள்ளது.

ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் சரிபாதி பேர் ஏதாவது ஒரு வகையில் உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.

4400 கோடி அமெரிக்க டாலர் நிதியும் அந்த நாட்டில் மேற்கொள்ளப்படும் மனிதநேய சேவைகளுக்காக தேவை என்றும் ஐக்கிய நாடுகள் மன்றம் கூறுகிறது.