வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (16:06 IST)

தேர்தலே கிடையாது.. எதுக்கு தேர்தல் ஆணையம்..? ரிஜெக்டட்..! – தாலிபான்கள் புதிய உத்தரவு!

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்த தாலிபான்கள் தேர்தல் ஆணையத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் அமைப்பு ஆப்கானிஸ்தானின் ஆட்சியை பிடித்தது. ஆட்சியை பிடித்தது முதலாக தாலிபான்கள் விடுத்துவரும் புதிய கட்டுப்பாடுகள் அங்கு பெரும் சர்ச்சையாகி வருகின்றன.

பெண்கள் சுதந்திரம், கல்வி முதற்கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரை அனைத்திற்கும் தாலிபான்கள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானிற்கு தேர்தல் ஆணையம் தேவையற்ற ஒரு அமைப்பு என தெரிவித்துள்ள தாலிபான்கள் தேர்தல் ஆணையத்தையும், தேர்தல் புகார் ஆணையத்தையும் கலைத்துள்ளனர்.

எதிர்காலத்தில் தேவைப்பட்டால் இந்த அமைப்புகள் திரும்ப கொண்டு வாப்படும் தற்போதைக்கு இவை தேவையற்றவை என தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.