தாய்லாந்து மன்னரின் துணைவி பதவி பறிப்புக்கு பின்னும் தொடரும் அதிரடி
மிகவும் மோசமான நடந்து கொண்டதாக ஆறு அதிகாரிகளை தாய்லாந்து மன்னர் வஜ்ரலாங்கோர்ன் பதவி நீக்கியுள்ளார்.
மன்னருக்கு எதிராகவும், விசுவாசமின்றியும் செயல்பட்டதாக கூறி, மன்னரின் துணைவியாக இருந்த பெண் தளபதி சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக்-கின் அரச அதிகாரத்தை பறித்த சில நாட்களில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
ஒரு பெண், ஒரு மூத்த காவல்துறை அதிகாரி மற்றும் இரண்டு அரச மெய்காப்பாளர்கள் இந்த ஆறு பேரில் அடங்குகின்றனர். தங்களின் நலன்களுக்காக அல்லது பிறரின் ஆதாயத்திற்காக தங்களின் அதிகாரங்களை பயன்படுத்தி கொண்டதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த திங்கள்கிழமை பெண் தளபதி சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக்-கின் அரச அதிகாரத்தை பறித்து வஜ்ரலாங்கோர்ன் உத்தரவிட்டிருந்தார்.