புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (17:44 IST)

பாதாள சாக்கடையிலிருந்து மீட்கப்பட்ட 13 அடி நீள பாம்பு..

பல நேர போராட்டத்திற்கு பிறகு 13 அடி நீள ராஜநாகம் ஒன்று பாதாள சாக்கடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில், பாங்காக் நகரில், ஹவுசிங் எஸ்டேட் பாதாள சாக்கடையில் 13 அடி நீளமுள்ள ராஜ நாகம் ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த காவலாளி ஒருவர், மீட்புக் குழுவிற்கு தகவல் தந்துள்ளார்.

இதனையடுத்து 7 பேர் கொண்ட மீட்பு குழுவினர், 13 அடி பாம்பை மீட்பதற்காக பாதாள சாக்கடையில் இறங்கினர். அதில் ஒருவர் பாதாள குழாய்க்குள் இருந்து தென்பட்ட பாம்பின் வாலை, பிடித்து இழுக்க முயன்றார். ஆனால் அது நழுவி நழுவி சென்றது. இதனைத் தொடர்ந்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பாம்பு அவரின் கையில் சிக்கியது. கிட்டதட்ட இந்த ராஜநாகம் 15 கிலோ எடை என கூறப்படுகிறது. பிடிப்பட்ட ராஜ நாகத்தை மீட்பு குழுவினார் அடர்ந்த காட்டுக்குள் விட்டனர்.