செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (18:28 IST)

’குட்டி யானை’யை காப்பாற்ற முயன்ற 5 யானைகள் பலி' ! சோகமான சம்பவம் !

தாய்லாந்து நாட்டில் உள்ள காஹோ  என்ற தேசிய பூங்கா உள்ளது. அங்கு ஒரு குட்டியானை பள்ளத்தில் வீழ்த்து தத்தளித்துக் கொண்டிருந்தது. அதன் பிளிறல் சத்தம் கேட்டு அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள், அந்த பூங்காவில் உள்ள  பணியாளர்களுக்கு தெரிவித்தனர்.
பின்னர் ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அந்த யானை ஒரு பாறையின் மீது விழுந்து இறந்துகிடந்தது.
 
அந்த இடத்திற்கு அருகாமையிலேயே சற்றுக் கீழே சென்று ஊழியர்கள் பார்த்தபோதும் மேலும் 5 யானைகள் பாறைகளில் விழுந்து இறந்துகிடந்துள்ளது. அதனால் ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர்.அதாவது முதலில் பள்ளத்தில் விழுந்த குட்டியானையை மீட்க போராடியதால் இந்த 5 யானைகள் பாறையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
 
இந்த யானைகளின் இறப்பை பார்த்து மிரண்ட இரு யானைகளை அழைத்துச்சென்ற ஊழியர்கள் அவற்றிற்கு மன அதிர்ச்சியிலிருந்து மீள பயிற்சி அளித்திருந்தனர்.