செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 30 ஏப்ரல் 2018 (18:18 IST)

சிரியா போர்: இரான் ராணுவத்தினர் பலர் பலி...

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள ராணுவ தளங்களில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களில் பலரும் பலியாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
ஹமா மற்றும் அலெப்போ மாகாணங்களில் உள்ள தளங்களில் தாக்கப்பட்டுள்ளதாக சிரிய ராணுவம் கூறியுள்ளது.
 
உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் ஏதுமில்லை. ஆனால், அரசு சார்புடைய 26 போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் பெரும்பாலானோர் இரானியர்கள் என்றும் பிரிட்டனை சேர்ந்த கண்காணிப்புக்குழு கூறுகிறது.
 
தாக்குதல்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரிய வரவில்லை. முன்னதாக மேற்கத்திய நாடுகள் மற்றும் இஸ்ரேல் சிரியாவை தாக்கியுள்ளன.
 
சிரியாவில் நடத்தப்பட்டதாக கூறப்படும் ரசாயன தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகள் சிரயா மீது குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தின.