1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (01:08 IST)

சுற்றிவளைத்த ரஷ்யப் படை, பணிய மறுக்கும் யுக்ரேன் படை

சுற்றிவளைத்த ரஷ்யப் படை, யுக்ரேன் படையைச் சுற்றி வளைத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
யுக்ரேனின் மேரியோல் நகரத்தை ரஷ்யப் படைகள் சுற்றிவளைத்துள்ளன.
 
ஆயினும் கெடு விதிக்கப்பட்டதையும் தாண்டிய யுக்ரேன் படைகள் சரணடைய மறுத்து வருகின்றன.
 
துறைமுகநகரான மேரியோபோலில் மூன்று புறத்தையும் ரஷ்யப்படைகள் சுற்றி வளைத்துவிட்டன. கடலோரப் பகுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது.
 
இந்த நகரத்தில் இன்னும் 3 லட்சம் பொதுமக்கள் சிக்கியிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
 
உள்ளூர்நேரப்படி இன்று மாலைக்குள் யுக்ரேனிய படைகள் சரணடைய வேண்டும் என்று ரஷ்யப் படைகள் கெடுவிதித்திருந்தன. ஆனால் யுக்ரேன் படைகள் சரணடையவில்லை. இதனால் பெரும் தாக்குதல் நடக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.