“ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தது”: யுக்ரேன் அதிபர்
ரஷ்யா - யுக்ரேன் இரு நாடுகளுக்கிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு அவர் வெளியிட்ட காணொளி பதிவில், “பேச்சுவார்த்தை நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தது” என தன் கருத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால், “யுக்ரேனின் நலனுக்கான முடிவுகளை எடுக்க இன்னும் காலம் தேவை” எனவும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யா மற்றும் யுக்ரேனுக்கு இடையிலான பேச்சுவார்த்தை மேலும் தொடரும்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி இன்று உரையாற்ற உள்ளார்.