திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : சனி, 13 ஜூலை 2019 (10:16 IST)

ஃப்ரூட் ஜூஸ் புற்றுநோயை உண்டாக்குமா? அதிர்ச்சி தரும் ஆய்வின் ரிசல்ட்

சர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கச் செய்யுமா என்ற ஆய்வின் முடிவு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
சர்க்கரை மிகுந்த பானங்கள், பழரச பானம், கார்பனேட் செய்த பானங்கள் உள்ளிட்டவை புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கச் செய்யும் என்று பிரான்ஸ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
 
பிரிட்டன் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு முடிவில் இந்தத் தொடர்பு தெரிய வந்துள்ளது. ஐந்து ஆண்டுகளாக 100,000 பேரை கவனித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்படும் மாற்றம் தான் இதற்குக் காரணம் என்று Université Sorbonne Paris Cité பல்கலைக்கழகக் குழு கூறியுள்ளது.
 
இருந்தபோதிலும் உறுதி செய்யப்பட்ட ஆதாரங்கள் போதுமான அளவுக்கு இல்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து இன்னும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.