1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஜூலை 2019 (16:07 IST)

வன்முறையில் 74 பெண்கள் பலி ! அதிர்ச்சி தகவல்

பிரான்ஸ் நாட்டில் , இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் தற்போதைய ஜூலை மாதம்வரைக்கும், 74 பெண்கல் குடும்பங்களில்  ஏற்படும் வன்முறையால் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிறது.
குறிப்பாக இந்தக் குடும்ப வன்முறை என்பது வீட்டில் கணவரலோ குடும்ப உறுப்பினர்களாலோ தாக்கப்பட்டு கொடுரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 
கடந்த ஜூலை 2 ஆம் தேதி  செந்தனியில் 22 வயது மதிக்கத்தக்க ஒரு 3 மாத கர்ப்பிணிப்பெண் அவரது கணவராலேயே கொலை செய்யப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
 
அதேபோல் அந்த பெண்ணின் கணவர் அடுத்தநாள் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து இந்த ஒரு வருடத்தில் குடும்ப வன்முறையால் உயிரிழந்த பெண்களின் எண்னிக்கை 74 என்று ஒரு அதிர்சிகரமான தகவல் அந்நாட்டில் வெளியாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாவதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.