முறைகேடாக காப்பீடு பணம் பெற கையை வெட்டிக்கொண்ட ஸ்லோவேனியா பெண்
ஸ்லோவேனியாவில் ஒரு பெண் தனது குடும்பத்துக்கு உதவும் பொருட்டு காப்பீடு பணத்துக்காக கையை வெட்டிக்கொண்டதாக ஸ்லோவேனியா காவல்துறை தெரிவித்துள்ளது.
முறைகேடாக காப்பீடு பணம் கோருவதற்காக உறவினர்கள் உதவியுடன் வட்டரம்பம் மூலமாக அப்பெண் கையை வெட்டிக்கொண்டார் என்கிறது காவல்துறை.
21 வயது பெண் மற்றும் அவரது உறவினர்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றவாளி என நிரூபணமானால் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.
இந்த சந்தேக நபர்கள் சமீபத்தில் காயங்களுக்கன காப்பீடு எடுத்திருக்கின்றனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
சுமார் நான்கு லட்சம் ஈரோக்கள் இழப்பீடு பெறுவதற்காகவும் காப்பீடு திட்டம் வாயிலாக மாதம் மூவாயிரம் ஈரோக்கள் பெறுவதற்காகவும் அப்பெண் இந்த காரியத்தைச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் அக்குடும்பத்தில் இருந்து நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் பின்னர் இருவர் விடுவிக்கப்பட்டனர்.
அக்குடும்ப உறுப்பினர்கள் வேண்டுமென்ற வீட்டுக்குள் வைத்து அப்பெண்ணின் கையை வெட்டியதாகவும் காவல்துறை கூறுகிறது.
அப்பெண்ணின் கை வெட்டப்பட்ட பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற உறவினர்கள் வட்டரம்ப கிளையில் அவரது கை மாட்டிக்கொண்டு விட்டதாகவும் ஒரு விபத்தாக அவரது கை வெட்டப்பட்டு விட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.
மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது வேண்டுமென்றே வெட்டப்பட்டு துண்டாகிப் போன கையை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். நிரந்தரமாக அவரது கை முடமாகவேண்டும் என்பதை உறுதிப்படுத்த அக்குடும்பத்தின் அவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் உரிய நேரத்தில் அந்த கை பாகத்தை எடுத்துச் சென்று சிகிசசையளிக்க உதவியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.