திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2019 (18:42 IST)

அடப்பாவமே !! 65 வயது மூதாட்டியை கற்பழித்த சிறுவர்கள்

சென்னை வியாசர் பாடியில் வசித்து வந்த 65 வயது மூதாட்டி வசித்து வந்தார். இவரது வீட்டுக்குள் புகுந்த, 17 வயதினை உடைய 3 சிறுவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாயர் பாடியில் உள்ள சத்திய மூர்த்தி நகரில் மாற்றுவாரிய குடியிருப்புகள் என்ற பகுதி உள்ளது. இதே பகுதியில் வீடு இல்லாத மக்கள் குடிசை அமைத்து வசித்து  வருகின்றனர்.
 
நேற்று இப்பகுதிக்கு கஞ்சா அடுத்துவிட்டு வந்த 3 சிறுவர்கள் அங்குள்ள ஒரு குடிசைக்குள் நுழைந்துள்ளனர்.
 
அதனுள் ஒரு மூதாட்டி இருந்துள்ளார். அவருக்கு வயது 65 ஆகும். அவரை கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. 
 
இதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்நிலையில் போதையில் மூதாட்டியை பலாத்காரம் செய்ததாக 3 பேரில் ஒருவனை பிடித்த போலீஸார் மற்ற இருவரை தேடி வருவதாக செய்திகள் வெளியாகிறது.
 
பாதிக்கப்பட்ட மூதாட்டி வசித்து வந்த பகுதிக்கு அருகில் உள்ள சமூக நலக்கூடம் தற்போது சமுக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதால் தான் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் போலீஸாரிடம் புகார் கூறியுள்ளதாக தகவல் வெளியாகிறது.