வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (23:52 IST)

ரஷ்யாவின் கேஸ் விநியோகம் ரத்து: மிரட்டல் நடவடிக்கை - ஐரோப்பிய ஒன்றிய தலைவர்

ஜெர்மனிக்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று ஜெர்மன் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
ரஷ்ய அரசு எரிவாயு நிறுவனமான கேஸ்ப்ரோம் போலந்து மற்றும் பல்கேரியாவிற்கு கேஸ் விநியோகத்தை நிறுத்திய பின்னர் லிண்ட்னரின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
ஜெர்மனி தனது எரிவாயு விநியோகத்தில் சுமார் 40% ரஷ்யாவை நம்பியுள்ளது. "நட்பற்ற" நாடுகள் எரிவாயுவை ரூபிள்களில் செலுத்த வேண்டும் என்று ரஷ்யா கூறியுள்ளது. மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் நடைமுறைக்கு வருவதால், அதன் நாணயத்தை உயர்த்துவதற்கான முயற்சியாக இது கருதப்படுகிறது.
 
போலந்து மற்றும் பல்கேரியாவிற்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதற்கான ரஷ்யாவின் முடிவு ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும், இது ஒரு வகையான மிரட்டலாக கருதுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் வூர்சுலா வோண்டேர் லேயன் தெரிவித்துள்ளார்.
 
"கேஸ்ப்ரோமின் முடிவு ஐரோப்பிய நுகர்வோர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்வதாக.'' அவர் இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.