போலாந்து குகையில் சிக்கிய இருவர் - மீட்புப் பணிகள் தீவிரம்

poland
Last Modified திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (21:10 IST)
போலாந்தில் வெள்ளம் சூழ்ந்த குறுகிய குகையில் சிக்கிய இருவரை மீட்க, மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர். வெள்ளத்தால் குகையின் நுழைவாயில் தண்ணீரால் நிரம்பியுள்ளதால், அவர்களால் வெளியே வரமுடியவில்லை.
தத்ரா மலைப்பகுதியில் உள்ள மிக நீளமான மற்றும் ஆழமான குகை என்று அறியப்படும் வீல்கா ஸ்னீசா குகையில்தான் இருவரும் சிக்கியுள்ளனர்.
 
அவர்கள் அக்குகையின் எந்தப் பகுதியில் இருக்கிறார்கள் என்று இன்னும் கண்டறிய முடியவில்லை என்பதால் கவலை நீடிக்கிறது.
 
குகைக்குள் செல்ல ஒரு வழியை ஏற்படுத்த, வெடிபொருட்களை பயன்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
 


இதில் மேலும் படிக்கவும் :