செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (14:07 IST)

சாண்ட்விட்ச் எடுத்து வர இவ்வளவு நேரமா? வெயிட்டரை சுட்டு கொன்ற கஸ்டமர்

பாரிஸில் சாண்ட்விட்ச் எடுத்துக் கொண்டு வர தாமதித்த வெயிட்டரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸின் கிழக்கு பிராந்தியத்தின் ஒதுக்குப்புறத்தில் உணவகம் ஒன்று செயல்பட்டு வந்திருக்கிறது. அங்கு நேற்று இரவு சாப்பிட வந்த ஒருவர் சாண்ட்விட்ச் ஆர்டர் செய்திருக்கிறார். சாண்ட்விட்ச் தயாரிக்க நீண்ட நேரம் ஆகியிருக்கிறது. அதனால் அந்த கஸ்டமர் கடுப்பானதாக தெரிகிறது.

ஒருவழியாக சாண்ட்விட்சை தயார் செய்து கொண்டு வந்தார் வெயிட்டர். ”ஒரு சாண்ட்விட்ச் கொண்டுவர இவ்வளவு நேரமா?” என கோபமான அந்த கஸ்டமர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வெயிட்டரை சுட்டிருக்கிறார்.

சத்தம் கேட்டும் அனைவரும் திரும்பி பார்த்த வேகத்தில் சுட்டவர் தப்பியோடிவிட்டார். 28 வயதே ஆன அந்த பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது அங்கிருந்தோரை அதிர்சிக்கு உள்ளாக்கியது.

கொலை செய்தவர் யார் என்பதை பாரீஸ் போலீஸார் சிசிடிவி கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர். ஒரு சாண்ட்விட்சால் ஒரு அப்பாவி இளைஞன் இறந்த சம்பவம் பாரீஸில் பலரை வருத்தமடைய செய்துள்ளது.