செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (11:59 IST)

நீங்களாவது சப்போர்ட்டுக்கு வந்தீங்களே! – பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கும் சீனா

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒருநாடும் வராத நிலையில் சீனா ஆதரவு தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துகளை நீக்கி அதை இந்தியவுடன் இணைக்கும் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து வருகிறது பாகிஸ்தான். தங்களுக்கு ஆதரவாக பல நாடுகள் வரும் என பாகிஸ்தான் எதிர்பார்த்தது. ஆனால் மற்ற நாடுகளோ இந்தியாவின் உள் விவகாரத்தில் தலையிடமாட்டோம் என கை விரித்துவிட்டன.

இதுகுறித்து வெளிப்படையாக பேசிய பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் “ஐ.நா சபையில் நம்மை வரவேற்க யாரும் பூச்செண்டுகளுடன் காத்துக் கொண்டிருக்கவில்லை” என கூறியுள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா இந்த விவகாரத்தை ஐ.நா சபை விசாரிக்க வேண்டுமென ஆதரவு தெரிவித்துள்ளது. சீனா ஐ.நா சபையின் நிரந்தர உறுப்பினராக இருக்கிறது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் ஏற்கனவே வர்த்தகரீதியாக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. சீனாவின் இந்த பாகிஸ்தான் ஆதரவினால் இது மேலும் வலுவடையும் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியாவின் இரண்டு பக்க எல்லை நாடுகளான பாகிஸ்தான், சீனா என இரண்டுமே இந்தியாவை எதிர்த்து ஐ.நா வரை செல்வது தேச பாதுகாப்பில் சில பரபரப்பான முடிவுகளை எடுக்க காரணமாகலாம் என்றும் கூறப்படுகிறது.