புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (09:56 IST)

ஒரே நாளில் தமிழகத்தில் நான்கு இடங்களில் ராகுல் காந்தி பிரசாரம் - உச்சகட்ட பாதுகாப்பு

ராகுல் காந்தி, மு.க. ஸ்டாலின் இன்று ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கின்றனர்.
இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் பிரசாரம் செய்கிறார். காலையில் கிருஷ்ணகிரியில் அவர் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்
 
அதைத்தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் வரும் ராகுல்காந்தி, சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இந்த கூட்டத்தில் ஒரே மேடையில் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசுகின்றனர்.