திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (09:46 IST)

அடையாளம் தெரியாத ஏவுகணையை கடலில் செலுத்திய வடகொரியா

அடையாளம் தெரியாத ஏவுகணை என விவரிக்கப்படும் ஒன்றை வடகொரியா கடலுக்குள் செலுத்தியதாக தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஏவல் நிகழ்ந்ததாக ஜப்பான் கடலோர பாதுகாப்பு படை முதலில் தகவல் வெளியிட்டது.
 
இது பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என்று ஜப்பானால் தெரிவிக்கப்பட்டாலும், இதுவரை ஏவுகணை பற்றிய உறுதிசெய்யப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.
 
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுடைய ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்ய ஐ.நா தடை விதித்துள்ளது.
 
2022இல் இது வடகொரியாவுக்கு முதல் ஏவுகணை சோதனையாகும்.
 
பொருளாதாரத்தை சீரமைப்பதற்கே இந்தாண்டில் தேசியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என வட கொரியா அதிபர் கிம் ஜோங்-உன் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில் இந்த ஏவுகணை சோதனை நிகழ்ந்துள்ளது.